அழகியசிங்கர்
என்பா 46
யார் வரைந்தார்
இந்தக் கோலம்
என் கண்ணில்
இப்போது பட்டது
பட்டவுடன் வந்தமர்ந்தது
எனக்குப் பிடித்தது
ஆழமாக உள்ளே
சென்றது.
என்பா 47
எல்லோரும் புத்தகங்களைத்
தயாரித்து விட்டு
அலை அலையென்று
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
காகிதத்தைக் தின்னும்
கழுதைகளை ஏனோ
காணவில்லை. இன்றும்.இன்றும்
