அருணாசலம் பதிவு

என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில், நான் மிகவும் கோபக்காரன். எனக்கு பிடிக்கவில்லை என்றால், யாரென்றும் பாராமல் உடனே அடித்து விடும் முரட்டுக் குணமுடையவன்…

ஒரு நிகழ்வை, உரையாடலின் தாக்கத்தை, பல்வேறு கோணங்களில் பார்க்கத் தூண்டியதும், பிறர் கருத்துக்களையும் பொறுமையாக எதிர்கொள்ளும் திறனையும், ஓரளவு கோபத்தை குறைத்ததும், பாலகுமாரனின் படைப்புகளை படித்ததால் தான்.

அவருடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றை ரசித்து படித்துள்ளேன்… இன்றும் நேரம் எடுத்து, நாவல்களை படிக்கும் தொடர்செயலுக்கு வித்திட்டவர் அவரே..

பின்னர் அவரைக் கடந்து, பல்வேறு தளங்களில் வாசிப்பை விரிவாக்கிக் கொண்டாலும், என்னுள் அவரின் தாக்கம் இன்றும் குறையவில்லை என்பதே உண்மை…

என் பதின்ம வயதில், உங்களிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.. என்னை ஒரு அன்பானவனாக மாற்றியதில், உங்களின் படைப்புகளுக்கு பெரும்பங்குண்டு.

உங்களை கடைசியாக சந்தித்தது Zero Degree Publication Inaugural function ல். அன்றும் மிகவும் தளர்வாகவே காணப்பட்டீர்கள்..

நாம் சந்தித்த போதெல்லாம், அப்போதைய புது நூல்கள் குறித்தும், மதுரையின் மழை, வைகை ஆறு குறித்தும், உண்மையான அக்கறையுடன் விசாரிப்பீர்கள்..

கடந்த 3 வருடங்களில், அடிக்கடி தஞ்சாவூர் ஞானம் ஹோட்டலிலும், சென்னை ஸ்ரீகிருஷ்ணா ஹோட்டலிலும் சந்தித்த வேளைகளில், இன்சுலின் எடுத்துக்கொண்டு தளர்வாகவே இருந்தீர்கள்.. நீங்கள் ரசித்துச் சாப்பிடுவதை ரசித்தவன் நான்….

உங்களுக்கு ஏது மரணம்.. என்னுடைய புத்தக அலமாரியில் நிரந்தரமாக இருப்பீர்களே.. அது போதும் எனக்கு.. என்ன அந்த இரு ஹோட்டல்களையும் இனிமேல் நான் தவிர்க்க வேண்டும்.. அவ்வளவே…

150 நாவல்கள், 100 சிறுகதைகள், 14 திரைப்படங்களுக்கு வசனம்… 50 க்கும் மேற்பட்ட விருதுகள்..
ஆயிரக்கணக்கான வாசகர்கள்..

உம்மிடம் கற்றுக்கொண்டது ஏராளம். வாழ்நாள் சாதனையாளரே.
போய் வாருங்கள்

உங்களுக்கு எனது நன்றிகள

This post is dedicated to my lovely brothers Renganathan M . & Ashok Kannan

One Comment on “அருணாசலம் பதிவு”

Comments are closed.