ஜேம்ஸ் என்கிற ஜெம்…/அசோகன் பாக்கெட் நாவல்

ஜேம்ஸ் அண்ணனை வாசகர்களுக்கு கொஞ்சம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எழுத்தாளர்களுக்கு ஜேம்ஸ் சாரை தெரியாமல் இருக்காது. குடும்ப பத்திரிகை ராணி ஒன்று மட்டுமே தனிக்காட்டு ராணியாக இருந்த பத்திரிகையுலக காட்டில், மாலைமுரசு ஆசிரியர் அய்யா ராமச்சந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்ட தேவி இதழுக்கு பொறுப்பாசிரியராக அண்ணன் ஜேம்ஸை நியமித்தார், தேவி வாரயிதழும் விற்பனையில் உயர்ந்து கொண்டே இருந்தது. 90 களில் இவருடைய பரிந்துரையில் அய்யா ராமசந்திர ஆதித்தனரால் தொடங்கப்பட்டது கண்மணி இதழ் , அதில் பல புதிய இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி நாவல்களை எழுத வைத்தார், அதிர்ந்து பேசமாட்டார், வீண் விளம்பரம் தேடமாட்டார்… என் தந்தையார் 81 ல் காலமான பின் உதவியியவர்களில் அண்ணனும் ஒருத்தர் பணத்தால் அல்ல மனத்தால். அண்ணனுக்கு இரண்டு மகள்கள் அந்த குழந்தைகளும் அவரது துணைவியாரும் என் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்கள், மூத்த மகளின் மகளுக்கு நேற்று வரவேற்பு ஹோட்டல் சவேராவில் நடந்தது, அதில் பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்களை அழைக்கவில்லை, ஏன் என கேட்டேன், தம்பி நான் ஓய்வு பெற்ற பின் அவர்களை அழைப்பது சரியா படல அதான் என்கிறார். இது அவரின் தரத்திற்கு சிறு உதாரணம்.
மணமக்களை வாழ்த்தி வந்தேன்.

ஊசிக்குறிப்பு : பத்திரிகையாளர்கள் இதயக்கனி எஸ்.விஜயன், வளர்தொழில் ஆசிரியர் ஜெயக்கிருஷணன் வந்துள்ளார்களே என நீங்கள் கேட்கலாம், அவர்கள் அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரால் பட்டைத் தீட்டப்பட்டவர்கள்.