

மரத்தின் கீழ் உதிர்ந்த மலர்களைப் பெருக்கி அள்ளுகிறாள்
அழகெல்லாம் குப்பையாகிப் போகின்றன
இன்னும் இன்னும் மரத்தில்
மலர்கள் மலர்ந்துகொண்டுதானிருக்கின்றன
இன்னும் இன்னும் உதிர்த்துக்கொண்டுதானிருக்கும்
அவள் பெருக்கி அள்ளிக்கொண்டுதானிருப்பாள்
அவளைப் பொறுத்தவரை
அது குப்பை
எனக்கோ மரத்தைப் பிரிந்துவிட்ட
மலர்களின் குவியல் குவியலான சோகம்.
