
அந்த பிஸ்டலில் குண்டுகளை நிரப்பவில்லை அவன் . அவளின் அப்பாவை மிரட்டுவதே நோக்கம் .
‘ஐயா , உங்க பொண்ணும் நானும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறோம் . சாதியைச் சொல்லி நீங்க எங்களைப் பிரிக்க நினைக்கிறது சரியில்லே . எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியலே . உங்களைக் கொண்ணுட்டுத் தப்பிக்கிறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலே . உயிர் மேல் ஆசை இருந்தா எங்களைச் சேர்த்து வையுங்க ’ என்று மிரட்டும் அவன் துப்பாக்கிக்கு முன்பு செயல் இழந்து நின்றார் அவர் .
அப்போது மாடியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் உள்ளே ஓடி தந்தையின் அலமாரியில் இருந்த , முழுதும் நிரப்பப்பட்டு இருந்த அந்த பிஸ்டலை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் .
‘அடப்பாவி , கொலை செய்யும் அளவு துணிந்து விட்டாயே . உன் குணம் தெரியாமல் உன்னைக் காதலித்து விட்டேனே . என் அப்பாவைக் காப்பாற்ற வேண்டுமே ‘ என்ற எண்ணத்தோடு ஓடி வந்து மாடியில் இருந்து அவன் மார்பை நோக்கிக் குறி பார்த்து , விசையை இழுத்து விட்டாள் .
