மூன்று ஸ்பானிய கவிதைகள்/ஃபெடரிக்கோ கார்சியா லோர்கா

சித்துராஜ் பொன்ராஜ்

(ஸ்பானிய நவீனக் கவிதைகளில் தனித்துவமிக்க மீயதார்த்தப் படிமங்களைக் கொண்டு வந்தவர். கீழே உள்ள கவிதைகளை மீயதார்த்த ஓவியங்களாகக் கற்பனை செய்து பாருங்கள். எனது மொழிபெயர்ப்பு)


  1. ஸ்பிங்க்ஸ் நேரம்

சபிக்கப்ப்ட்ட நட்சத்திரங்கள்
உனது தோட்டத்தில்
வளர்கின்றன.

வளைந்த உன் கொம்புகளின்
அடியில்தான்
நாம் பிறந்து சாகிறோம்.

குளிரில் உறைந்துபோன
நேரமே!

அந்தச் சங்கீதப்
பட்டாம்பூச்சிகளின்
தலைமீது

நீ கல்லாலான கூரையைக்
கட்டி வைத்து

நீல நிறத்தில்
அமர்ந்திருந்தபடியே

வெட்டிக் களைகிறாய்,

இறக்கைகளையும்
எல்லைகளையும்.

+++

  1. அவர்கள் மூன்று மரங்களை வெட்டினார்கள்

மூன்று இருந்தன.
(பகல்நேரம் அதன்
கோடரிகளோடு வந்தது)

இரண்டு இருந்தன.
(வெள்ளி நிற இறக்கைகள்
தரையைத் தொடுகின்றன)

ஒன்று இருந்தது.

எதுவுமே இல்லை.

(தண்ணீர் நிர்வாணமாக
நின்றது).
+++

  1. முதலும் முடிவுமான தியானம்

காலம்
இரவின் நிறத்தில் இருக்கிறது.

அமைதியான இரவின் நிறத்தில்.

மகத்தான
மிகப் பெரிய நிலவுகளில்

நிரந்தரம் என்பது
பன்னிரண்டு மணியிலேயே
நகர முடியாமல்
சிக்கிக் கொண்டிருக்கிறது.

காலம்,
தனது கோபுரத்தில்
முடிவே இல்லாமல்
தூங்கி விட்டது.

எல்லாக் கடிகாரங்களும்
நம்மை ஏமாற்றுகின்றன.

காலத்திற்கும் எல்லைகள் இருக்கத்தான் செய்கின்றன.

La hora esfinge


En tu jardín se abren
las estrellas malditas.
Nacemos bajo tus cuernos
y morimos.
¡Hora fría!
Pones un techo de piedra
a las mariposas líricas
y, sentada en el azul,
cortas alas
y límites.
+++

Cortaron tres árboles


Eran tres.
(Vino el día con sus hachas.)

Eran dos.
(Alas rastreras de plata.)

Era uno.

Era ninguno.

(Se quedó desnuda el agua.)

+++

Meditación primera y última


El Tiempo
tiene color de noche.
De una noche quieta.
Sobre lunas enormes,
la Eternidad
rstá fija en las doce.
Y el Tiempo
se ha dormido
para siempre en su torre.
Nos engañan
todos los relojes.
El Tiempo tiene ya horizontes.