
அவர் மறைவிற்கு மிகச்சில மாதங்களுக்கு முன் அவரை நண்பர்களுடன் சந்திக்கும் வாய்ப்பை Puduvai Ilavenil லும் அவருடைய மகன் பிரபி அவர்களும் ஏற்படுத்திக்கொடுத்தனர் ..
நோயின் பிடியில் இருந்தபோதும் குன்றாத உற்சாகம் , எப்போதும்போலவே ஓயாத உரையாடல் .
யார் மீதும் புகார்கள் இல்லை … எந்த இலக்கிய சர்சைகளிலும் ஆர்வம் இல்லை .. தான் எழுதிய மிச்சக்கதைகள் புத்தகத்தை பற்றி சொன்னார்
Damarugam Learning Centre சார்பாக கோவையில் வெளியீட்டு விழா நடத்த ஒப்புதல் கேட்டோம் .. ஜெயமோகனையும் , நாஞ்சில் நாடனையும் கூப்பிட்டு பண்ணுங்க என்று உற்சாகத்துடன் சொன்னார்..
(அவ்வாறே சிறப்பாக நடத்தி் , வீடியோவை அனுப்பிவைத்தோம் .. முழுமையாக பார்த்து் மகிழ்ந்தார் என்று இளவேனில் பின்னர் செய்தி்அனுப்பினார்)
Siva Raj குக்கூ பள்ளியைப் பற்றி சொன்னபோது குழந்தைகளுக்கு எப்படி கற்பிக்கவேண்டும் என்று ஆர்வத்துடன் விளக்கினார்
உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட்டபோது , உள்ள ஒண்ணும் சரி இல்ல … என்றார் ..எனக்கு அப்போதே திக் என்று இருந்தது .. அனால் அவர் பேச்சில் உற்சாகம் குறையவே இல்லை .
சில நாட்களிலேயே கரிசல் மண்ணின் ஆணிவேர் அற்றுப்போன செய்தி வந்தது ..
கிரா பிரபி யுடன் பேசிக்கொண்டிருந்தபோது்
அவர் சொன்ன தகவல் ..
கொரானா தொற்று காலத்தில் நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பிரபி சொன்னபோது , கிரா சிரித்துக்கொண்டே சொன்னாராம்
“எமன் பிள்ளையை பேய் அடிக்காதுடா “
எங்கள் சந்திப்பின் போது Ayyalu R. Kumaran எடுத்த படம் .. – Raveendran Ramasamy
