வண்ணதாசன் கவிதை

நானும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

தெருவை வெயில் நகர்த்தி நகர்த்தி
நடுவில் வைக்கிறது.

வெயிலைத் தெரு எடுத்து எடுத்து ஓரத்தில் வைக்கிறது.

இரண்டிற்கும் முடியாததை சைக்கிள் ஓட்டும் பையன் செய்துவிடுகிறான்.

அவன் கால்-சட்டைப் பையில் இருக்கிறது இப்போது வெயிலும் தெருவும்.