
டாக்டர் வரவுக்காக
வீட்டு வாசலில் காத்திருந்தான் சுந்|தர்
நாளை தீபாவளி
ஊரேங்கும் பண்டிகை கோலம்
சுந்தர் மனதில் மட்டும் சோகம்
காரணம்
மனைவி சியாமளாவிற்க்கு பத்து நாட்களாக தீராத காய்ச்சல் நேற்றுதான் டிஸ்சார்ஸ் பண்ணி வீட்டுக்கு அழைத்து வந்தான்
அவர்களுக்கு ஒரே குழந்தை பிரனேஷ்
இன்று காலை மறுபடியும் சியாமளாவிற்க்கு காய்ச்சல் மற்றும் வாந்தி
“ஒரு கப் காப்பி கிடைக்குமா ” என்று முனங்கியவளுக்கு
“இதோ தர்ரேன்” என்று சொல்லி கொண்டேஅடுப்படிக்கு விரைந்தான்
கையில் காப்பி கோப்பையுடன் வந்தவன்
சியாமளாவின் அசைவற்ற உடல் கண்டு அதிர்ந்தான்
உடனே டாக்டர்க்கு போன் செய்தான்
“அம்மாக்கு என்னப்பா ஆச்சு” என்று மறுபடி மறுபடியும் கேட்ட குழந்தைக்கு
“ஒன்னும் இல்லடா தங்கம் “
அம்மா துாங்குகிறாள் என்றான்.
அரை மணி நேரத்தில் டாக்டர் வந்து
சேர்ந்தர்.
சியாமளாவை பரிசோதனை செய்து விட்டு
“சுந்தர் …. எல்லாம் முடிஞ்சு போய் அரை மணி நேரம் இருக்கும் ” என்றார்
நெஞ்சு படபடக்க ” என்ன சொல்றிங்க டாக்டர் ” என்று கண் கலங்கினான் சுந்தர்
“அம்மா எழுந்திரி மா எழுந்திரி.. இந்த பார் என் தீபாவளி தூப்பாக்கி
.. டூமில் .. டூமில் “
என்று வானத் நோக்கி சுட்டு கொண்டே தன்னை அறியாமலே தன் அம்மாவுக்கு இறுதி மரியாதை செய்து கொண்டிருந்தான் குழந்தை பிரனேஷ்

துயரமிக்க சூழல்
அதன் காட்சிப் படுத்தல்