அவள்/ப.மதியழகன்

குழல்கற்றை காற்றில்
சற்றே அசைந்து ஆடியது
கொசுவத்தை தூக்கிச் சொருகி
குடத்தை இடுப்பில் லாவகமாக
ஏந்தி இருந்தாள்
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையாகவே மணமுண்டு
என்பது இன்று ஊர்ஜிதமானது
வெற்றுக் கழுத்து
கன்னிப் பெண்ணுக்கு ஆகாது
என்பதால் கவரிங் செயின்
கழுத்தில் மின்னியது
அன்ன நடைக்கு ஏற்றபடி
அசைந்தாடியது காதில் அணிந்திருந்த
ஜிமிக்கி கம்மல்
வாசம் வீசும்
வாடாத மலர்
கேசத்தை அலங்கரித்தது
ஆடவர்களின்
ஏக்கப் பார்வை
குடத்து நீரை உஷ்ணத்தால்
கொதிக்க வைத்தது
அவளுடைய பார்வை
அம்பினை எதித்கொள்ள முடியாமல்
பரிதி மேற்கில் பதுங்கியது
வழிநெடுங்கிலும் புற்கள்
மென்பஞ்சுப் பாதங்களை
மெத்தெனத் தாங்கின
படித்துறையில் கால்வைத்ததும்
குளத்து நீரில் பிரதிபலித்த
பிம்பத்தைப் பார்த்து
கந்தர்வர்கள் ஏக்கப்
பெருமூச்சுவிட்டனர்
பஃப் கை வைத்த
ஜாக்கெட் அவளுக்கு
எடுப்பாய் இருந்தது
கெளசிகனின் சாபமோ
என்னமோ
பேரழகிகள்
எப்போதாவது தான்
பூமிக்கு வருகிறார்கள்!

One Comment on “அவள்/ப.மதியழகன்”

Comments are closed.