இருப்பின் பயணம்/சிறகா

ஒளிச் சுடராய் வெளியேறுகிறது

மெல்ல மெல்ல சிறகடித்து

ஆழ்ந்த நிச்சலன த்தை உள்ளடக்கிய சக்தி வாய்ந்த பிரபஞ்ச இருளினுள்

இயற்கையின் கொடையான பூமியிலிருந்து

நட்சத்திர பால்வெளியில் ஒளிர்ந்து மிளிர

மண்ணின் மீது ஓடோடி பொருள் தேடி வாழ்வில் வளம் கண்டு வளர்ந்தது

மண்ணறை க்குள் தன்னை சங்கமித்து கொண்டது

அதனதன் இருப்பில் இருளை ஊடுருவி அமைதியான பயணம்

உடன் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை
எடுத்துச் செல்வதும் எதுவுமில்லை

அமைதியிலிருந்து வந்து சலனங்களை கடந்து நிச்சலனத்திற்க்குள் திரும்புதல்.