ஆர் வத்ஸலா
எனக்கு துர்க்கையாக வேண்டாம்
லக்ஷ்மி சரஸ்வதியாகவும்
எனது அடையாளத்தை
என் நெற்றி மையத்திலுள்ள பொட்டின் நிறத்திலும்
கழுத்தில் தொங்கும்/ தொங்கா ஏதோ ஒன்றிலும்
எனக்குத் தரும்
வெற்றிலை பாக்கு பையில் வைக்கா பொருட்களிலும் அடைக்காமலிருங்கள்
அது போதும்
மிச்சத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்
எனக்கு கொலு
பார்க்கப் பிடிக்கும்
அதில் அமர அல்ல

Absolutely. I too like keeping it for its aesthetics.