செ.புனிதஜோதிகவிதை

முகமறியாதப்
பக்கத்து வீட்டுக்காரியின்.
வீட்டுச் சாளரம்
கொடிக்கயிறு
திரைச்சீலை
ரோஜாச்செடி
அத்தனையும்
அனுமதியின்றி
என் பார்வைக்கு
அமர்ந்து உரையாட
இழுத்துவருகிறது
நிழல்.