இலக்கிய இன்பம் 46/கோவை எழிலன்

மரங்களும் ஆகுதி வேட்கும்

பெரிய புராணத்தில் சம்பந்தர் அவதரித்த சீர்காழித் தலத்தை வருணிக்கும் சேக்கிழார் அந்நகரில் வேள்வித் தீ போன்ற செந்தாமரை மலர்களில் மாமரங்கள் மாவிலையினூடே நெய் போன்ற மாங்கனிச் சாற்றைக் கொட்டிக் கொண்டிருப்பது மரங்களும் வேள்வி செய்வது போல் இருப்பதாகக் காட்டுகிறார்.

ஞானக்குழந்தை அவதரிக்கப் போகும் தலத்தில் மனிதர் மட்டுமல்ல மரங்களும் வேள்வி செத்தன எனக் கூறுவது பொருத்தமான கற்பனையே. அந்தச் சுவை மிக்க பாடல் இதோ

“பரந்தவிளை வயற்செய்ய
பங்கயமாம் பொங்கெரியில்
வரம்பில்வளர் தேமாவின்
கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரநீ ளிலைக்கடையா
லொழுகுதலா னெடிதவ்வூர்
மரங்களுமா குதிவேட்குந்
தகையவென மணந்துளதால்.”

One Comment on “இலக்கிய இன்பம் 46/கோவை எழிலன்”

Comments are closed.