கடிகாரத்தில் மணி பார்த்து…….

எல்.ரகோத்தமன்
 
 பேருந்தைப் பிடிக்க
ஓடோடிச் சென்றேன்!
புத்திசாலி பேருந்து
என்னை உதாசினப் படுத்திவிட்டு
ஓடிவிட்டது! 

நான் ஏன் பேருந்தை தவறவிட்டேன்! 

கை புண்ணுக்கு மருந்து கண்ணாடியில்!
உடைந்தது கண்ணாடி!
சில்களில் தெரிந்தன  முகங்கள்! 

கோரமோ  அகோரமோ
முகங்களெல்லாம்
ஒவ்வொன்றாய்
கழன்று விழுந்தன
திரை மறைவில் ! 

ஆனால்
என் கை கடிகாரம்
இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது!

அதில் மணி பார்த்து
நொடிகளை கடத்திக் கொண்டிருந்தேன்!
அதற்குள்
நூறு பேருந்துகள்
என்னை கடந்து விட்டன!