எஸ். சண்முகம் கவிதை

இப்போது கேட்ட ஒலிதான்
மீண்டும் தொடர் ஒலியாய்ப் பெருகியோடி
எங்கும் கேட்கும்படியாக மடியாமல்
முதலொலியாய் உயிர்நீட்டிச் செல்வதை கேட்டபடியே இருக்கையில்

நொடிதிகைக்க மீண்டும் நகரும் அவ்வொலி
பெருங்கிளையில் சற்றுமுன் வந்தமர்ந்த
சிறுகுருவியின் அலகுநுனியில் பதிய
ஒருமுறை தலையை உதறிவிட
அதனருகிலுள்ள சிற்றிலைகள் கரும்பச்சையாய் படபடக்கின்றன.

Image Courtesy : Swaminathan Rajamani