
1)
மோதிரம் காணவில்லை எனக் கண்டபின் தான்
புரிந்தது உன் பாசக் கைகுலுக்கலின் அர்த்தம்.
👓 ✍️
2) ஜன்னல் திறக்கக் காத்திருந்து
உள் நுழைந்து
விளையாடும்
சூரியன்
தண்ணீர் கிளாஸில்
அடியில்
எஞ்சியிருக்கும்
நீரைத் தாகத்துடன் பருகிப் போகிறது.
👓 ✍️
3) மலைச்சரிவில்
குதித்துக்
குதூகலிக்கும்
அருவி
இரு சிறுவர்களையும்
தூக்கி வந்து
பந்தாடி கும்மாளமிடுகிறது.
👓 ✍️
4) எஞ்சியிருப்பது
சில நாட்களே
செப்பனிடு
பாதையை.
👓 ✍️
5)
யாரையுமே
காணோமே
சென்று விட்டார்களா அனைவரும்
கொரோனாவுடனே.
👓 ✍️
