ஒரு பெண்ணிடம் பழகும் தோரணை/விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

(மொழிபெயர்ப்பு : சித்துராஜ் பொன்ராஜ்)


நாம் இருவரும் தீவிரமாக
காதலிப்போமா
என்பதைத் தீர்மானிப்பது

இந்த மாலை நேரத்தின்
கையில்தான் இருந்தது.

இருட்டியிருந்தது,
அதனால் யாரும்
எங்களைப் பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட
அவள் பக்கமாகச் சாய்ந்து,

அவள் பக்கமாகக்
கிட்டத்தட்டச் சாய்ந்து
கொண்டே

அவளிடம் ஒரு
கருணையுள்ள தந்தையின்
குரலில் சொன்னேன்:

“உணர்ச்சிகள் செங்குத்தான
தொங்குபாறைகளைப்போல்
ஆபத்தானவை,

தயவு செய்து
இன்னும் கொஞ்ச தூரம் –
ஓரடி எடுத்து வை.

இன்னும் கொஞ்ச தூரம் –
ஓரடி எடுத்து வை,
தயவு செய்து.”

**
Отношение к барышне

Этот вечер решал –
не в любовники выйти ль нам? –

  • темно,

никто не увидит нас,
Я наклонился действительно,
и действительно
я,

наклонясь,
сказал ей,
как добрый родитель:
“Страсти крут обрыв –
будьте добры,
отойдите.
Отойдите,
будьте добры”.