கோலம்/அழகியசிங்கர்

எப்போதும்
வீட்டு வாசலை
பார்த்தபடி போவதில்லை
இன்று
ஏனோ வீட்டு
வாசலைப் பார்த்தேன்
எப்போதும் போடும்
கோலம்தான்
வசீகரமாகத் தெரிந்தது