
(1)
ஊடறுத்து
ஓ
டி
ய
த
ன்
தடயங்கள்;
ஓடியது
வற்றிய பின்னும்
அள்ளும் வரை
(2)
எப்பொழுதும் நடவாதது
இப்பொழுதும் நடவாது
கனவுகள்
கலவரமா
அன்றி
வசீகரமா
(3)
நடு வீட்டில்
நீட்டிப் படுத்து
இளஞ்சிவப்பு
வாய் திறந்து
உணவு
கேட்கும் அதற்கும், எனக்கும்
பெரிதாகவொன்றும்
வித்தியாசமில்லை
(4)
கூடடைந்த
பறவைகளின் கீச்சுகளனைத்தும்;
அடங்கியே போயிற்று,
கூடு மறந்த
ஒற்றைப்
பறவையின்
குரலில்
(5)
பிறிதொரு
தருணம்
இசைக்கக்
காத்திருக்கும்
இப்பொழுதைய மௌனம்
இம்சை
(6)
இதுகாறும்
வாழ்ந்த வாழ்வு
அர்த்தமற்றுப்
போகும்
தருணம்
பெருவாழ்வு
(7)
எனது
பயணங்களில்
பின்னோக்கி விரைவது
சாலையோரங்கள் மட்டுமல்ல
- கவிஞர் சுரேஷ்

அருமை
அருமை…அருமை
சிறந்த குறுங்கவிதைகள் தொகுப்பு. மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.