
என்பா- 95:
நடந்துகொண்டே இருக்கிறேன் நாளும் பொதுவழியில்;
முன்னால் நடந்தவர்கள் சிலரைக் காணவில்லை!
புதிது புதிதாக சிலரின்று நடக்கின்றனர்!
எது என்பயண எல்லைக்கோடு?
என்பா – 97:
பருவத்தில் மாம்பழங்கள் பாகாய் இனிக்கும்!
மணக்கும் மலர்களுக்கு விளம்பரம் தேவையில்லை!
ஆசையாய் புதுவண்ண நூல்களை ஆக்கினேன்!
வாசகர்கள் கையில்தான் காசில்லை!
