
மூணுநாலு வருஷத்திற்கு முன்பு இறந்துவிடுவேன் என நினைத்தேன். நினைவே இல்லாமல் இருந்தேன். எல்லோரும் அழுதார்கள். எனக்கு ஒரு நாளில் வாழ்வதே கஷ்டமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த தமிழக அரசின் திரு
வி.க.விருதுக்கான நிகழ்ச்சி சென்னை மியூசியம் தியெட்டரில் நடப்பதாகச் சொன்னார்கள். “உங்களால் அந்த இடத்தை நினைவு படுத்திக்கொள்ள முடிகிறதா?” 20 படிகள் இருக்கும். கைபிடி இருக்காது. உள்ளே போனால் அது உடனே கீழிறங்கும். உள்ளே ஒரு படி மாதிரி இன்னொரு படி இருக்காது. அத்துடன் எனக்கு என்ன கவலை என்னவென்றால் விருதைப் படியேறி வாங்க வேண்டும். நான் அங்கு ஒரு நாடகத்தின்போது கால் தவறிக் கிழே விழுந்திருக்கிறேன். அந்தக் காயம் ஆற 6 மாதம் ஆனது.
இன்றைக்கு மானுடவியல், சமூகவியல் சார்ந்த நாவல்களே அதிகம் கவனம் பெறுகின்றன. இவை இலக்கியத் தரமானவையா?
பெரிய நாவலாக இருந்தாலே அதன் இலக்கியத்தரம் குறைந்து போய்விடும். நாவல் வடிவத்திற்கே குறைபாடு உள்ளது. உடனே, ‘டால்ஸ்டாய் எழுதவில்லையா?’ என்பார்கள். war an peaceஇல் நிறைய பிழைகள் உண்டு. அந்தப் பிழைகளைச் சரிசெய்வதற்காக ஒரு பின்னுரை, பிறகு ஒரு பின்னுரை, அதற்குப் பிறகு இன்னொரு பின்னுரை என அந்த நாவலில் நான்கு பின்னுரை இருக்கும். நாவல் எழுதிவிட்டு ஒருத்தன் பின்னுரை எழுதுகிறான் என்றால் அந்த நாவலில் அவனுக்குத் திருப்தி இல்லை என்றுதானே அர்த்தம்? ஆனால் அதே மனுஷன் ரொம்ப சின்ன நாவல்களும் எழுதியிருக்கிறார். முன்பு இந்த மாதிரியான நாவல்களுக்கு வாசகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். பதிப்பாளர்களும் வெளியிடமாட்டார்கள்.
அசோகமித்திரன் நேர்காணல்
நன்றி: மண்குதிரை
ஆர்.கந்தசாமி முகநூல் பதிவிலிருந்து
