
எழுத்தாளன் எதைச் சொன்னாலும் சுவாரசியமாக இருக்க வேண்டும். நம்பும்படியாக இருக்க வேண்டும். தி.ஜ. ரங்கநாதன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தாரே, அவருக்கும் கல்கியைப் பிடிக்காது. என்னைப் பார்க்கும்போது இவருக்குக் கல்கியைப் பிடிக்குமாம் என்று கிண்டல் செய்வார். நான் இப்படித்தான் என்று கிடையாது. ஜெயமோகன் எழுதிய மகாபாரதத்தை என் மனைவியிடம் கொடுத்தேன். அவளால் படிக்க முடியவில்லை. அதில் பத்துப் பதினைந்து பகுதிகள். அதற்கு இத்தனை விவரிப்புத் தேவையா? ராஜாஜி மகாபாரதத்தை 250 பக்கங்களில் எழுதியிருப்பார். அதற்கு இருக்கிற வாசகப் பரப்பு இதற்கு இருக்குமா? மகாபாரதத்தைப் பிரச்சாரம் செய்ய நான் விரும்பினால் இதைப் பரிந்துரைக்க முடியாது. இதில் வேறு என்னென்னவோ குழப்பங்கள் இருக்கின்றன. நாகர்கள் நாகர்கள் என்று சொல்கிறார். நாகர்களுக்கு அரண்மனையெல்லாம் கிடையாது. ஆனால் அவர் அதற்கெல்லாம் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்கிறார். மலையாள மகாபாரத்தில் இருக்கிறது என்கிறார்.
நன்றி: தேவிபாரதி, சுகுமாரன், காலச்சுவடு
முக நூலில் ஆர். கந்தசாமியின் பதிவு
