
தெங்கிளங்காய் பறித்துத்தாக்கும்
இலக்கிய இன்பம் 47
இங்கு ஒரு போர்க்காட்சியைக் காணலாம். குறிஞ்சி நிலத்தில் தினைப்புலம் காக்கும் வேட்டுவப் பெண்கள் கவண் கல்லில் வீசும் சிவந்த மாணிக்கங்கள் மருத நிலத்தில் வாழும் குரங்குகள் மீது விழுகின்றன. அவை கோபம் கொண்டு அங்கிருக்கும் தென்னை இளநீரை பறித்து அவர்கள் மீது திரும்ப வீசித் தாக்குகின்றன. இந்த அரிய காட்சியைத் திருப்பனசைப் புராணம் பதிவு செய்கிறது.
“மாதிரத்துச் சிறுமாதர்
ஏனல்கவர் குரீஇனங்கள்
மறுக வீசும்
பீதகத்தில் ஆர்தழற்செம்
மணிவந்து தாக்கவந்தப்
பெற்றி கண்டு
தாதிரும் பூம்பாளைத்
தெங்கிளங் காய்பறித்து
தாக்கும் மந்தி
பேதமிலா வரதனமும்
இளநீரும் ஈரிடத்தும்
இயலு மாதோ.”
