
ஈழத்து எழுத்தாளர்கள் நிறையபேரை போருக்கு முன்னரும் பின்னரும் என
க்கு அறியக்கிடைத்திருக்கிறது.தஞ்
சாவூர் ஒரு தோதான இடமாக இருந்த
தும் தஞ்சை ப்ரகாஷ்-ம் காரணம்
என்றுதான் சொல்லவேண்டும் .கே.
டானியலிருந்து அதிகமாக இது நேர்
ந்தது. எஸ்.பொ,டொமினிக் ஜீவா
சாந்தன்,சிவத்தம்பி,வி.ரி இளங்கோ
வன்,கான்,சோமகாந்தன் எனப் பட்டி
யலே உண்டு.ஆதவன் கதிரேசர்பிள்
ளை,கலைச்செல்வன்,சேரன் ருத்ர
மூர்த்தி போன்றவர்களும் அறிந்த
பெயர்களே.குறிப்பாக லண்டன் திரு
பத்மநாபஐயர்.மு.தளைய சிங்கம்,மு
பொன்னம்பலம்.குப்பிழான் ஐ சண்
முகம். என ஒரு வரிசையே உண்டு.
ஏனோ அ.முத்துலிங்கத்தைச் சந்திக்க
ஏலாவது போயிருகிறது.ஒருக்கால்
அவர் தஞ்சாவூர் வாராதிருக்கலாம்.
அவரது எழுத்துக்கள் மூலமே அறிய
வேண்டியதாயிற்று.என்அரசூர் கிராம
த்து வீட்டிற்கு நிறைய இலங்கை எழு
த்துக்கலைஞர்கள் வந்திருக்கிறார்
கள்.”இனுவிலை’ப் பிறப்பிடமாகவும்
பிரான்ஸை வதிவிடமாகக் கொண்ட
வருமான” என்ற பதப்பிரயோகம் சற்
றே சங்கடப்படுத்தும்.சிலநேரம் கேலி
க்கும் ஆளாகும்.அதென்ன இரண்டு
ஊர்கள்? காலம் என்பதைத்தவிர வே
றென்ன ?
அ.முத்துலிங்கம் பேராசிரியர் கைலா
சபதியால் எழுத்துக்களத்திற்கு அழை
த்துவரப்பட்டவர்.மொழிபெயர்ப்பாளர்
நாவலாசிரியர்,,சிறுகதையாளர்,,கட்
டுரை ஆசிரியர் சினிமா விமரிசகர்
எனப் பன்முக வித்தைக்காரர்.அ.முத்
துலிங்கம் ‘நேர்காணலில்’ புதிய தடம்
பதித்தவர். ஒரு நேர்காணல் எப்படி
இருக்க வேண்டும் என்பதை இவரி
டம்தான் படிக்கவேண்டும்.துல்லியம்.
ஹார்வர்ட் தமிழ் இருக்கை,”தமிழ் லிட
ரரி கார்டன்” என்ற பெயர்களோடு நம்
முத்துலிங்கத்தைத் தொடர்புபடுத்து
வது நியாயமான ஒன்றுதான்.புலம்
பெயர் இலக்கியக்காரர்களுக்கேயுரி
ய கோபம் இவரிடம் காணமுடியாது.
நிறையச் சாதுவானவர்.தம் வேர்கள்
ஓரிடத்திலும் கிளைபரப்பியது இன்
னோரிடத்திலும் என்பது ஒரு துன்பி
யல் விவகாரம். இதுகூட ஒரு செழு
மையான இலக்கியத்தைத்தர உந்து
சக்தியாக இருக்கிறது.அ.முத்துலிங்
கத்தின் எழுத்தில் எந்த ஏக்கமும் பிரதி
பலிப்பதில்லை.இவரது இயங்குதளம்
வேறாக இருக்கிறது.எழுத்தின் கனம்
கூடுதல்.பொறுப்பான எழுத்து எனவு
ம் சொல்லலாம்.
உலகம் முழுதும் ஒத்த இதயத்துடிப்
போடு அழகிய மக்களோடு உணர்வு
பூர்வமாக ஒன்றிணையும்போது தனி
மையை உணரமுடியாது.உயிர்த்துடிப்
போடு வாழ்ந்து பணிகளைச் செய்து
தாம் பிறந்த சமூகத்திற்கான பங்களி
ப்பைப் செய்து பிரக்ஞை கொண்டு தனிமனிதனாக இருப்பவர்கள்
தாம் உண்மையான மனிதர்கள்.அ.மு
த்துலிங்கத்தைப் பற்றிய என் அறிதல்
இதுதான்.ரொம்பக் காத்திரமான எழு
த்து என்பதில் தயக்கமில்லை..
“மகாராஜாவின் வண்டி” வாசித்தபோ
து எனக்கேற்பட்ட எண்ணம் இதுதான்.
அவரது எல்லா எழுத்தையும் வாசிக்க
க்கிடைக்கவில்லை என்றாலும் வாச
னுக்கு ஓர் எழுத்தாளனின் ஒரு சொ
ல்கூட விமரிசனத்திற்குத்தோதானது
தான். ஒரு குருவைப் தரிசிப்பது என்
பது அவரது இருப்பை உணர்வது
தான்.அவரது நூற்றுக்கு மேற்பட்ட
தான படைப்புகள் மொத்தத்தையும்
அலசிப் பார்ப்பதில் அர்த்தமில்லை.
அ.முத்துலிங்கத்தின் எழுத்தில்
தேவையற்ற வலியில்லை.மிகச்சாது
வான எழுத்து.அயோனிஜனாக இருப்
பது என்பது இல்லாத ஒன்றுதான்.
பரந்த இதயம் படைத்தவர்க்கு அனை
தும் சொந்தம்தான்.
