
மலர்கள்
சில வண்ணங்களைக்
காட்டும்போது
ரசித்து விரும்பும் நான்,
வேறு வடிவங்களில்
அவ்வண்ணங்களைக்
காணும்போது
ஏனோ வெறுக்கிறேன்!
நான் ஏற்றுக்கொண்ட
நம்பிக்கையை – பலர்
குறை காணும்போது – எந்தக்
கோபமும் இன்றிக்
கடந்துவிடும் நான்…
சிலர் சொற்களில்
விஷமம் வெளிப்படும்போது
கொதிப்படைகிறேன்!
சிலருக்குச் சில நேரங்களில்
எடுத்துச் சொல்ல
விரும்பும் மனம்…
பலருக்கு பல நேரங்களில்
பதில் சொல்ல
விரும்புவதே இல்லை!
மலர்கள் மௌனித்திருப்பதாக
சிலர் மொழிகின்றனர்!
வண்ணமயத்துடன் மொழிவதாக
சிலாகிப்பவரும் உள்ளனர்!
கண்களின் அசைவில் கவிதை மொழி
மனம் வரைவதுபோல்,
தென்றல் அவற்றின் மொழியறிந்தே
மணம் பரப்புகிறது!

சபாஷ்
மனந்திறந்த பாராட்டுக்கு மனமுவந்த நன்றி.