
மழை வரும்போதெல்லாம்
குடையைத் தேடுபவனுக்கு
மழையோடு அத்தனை சிநேகமிருப்பதில்லை
மழை வரும்போதெல்லாம்
நனைய விரும்புவனுக்கு
குடையோடு அத்தனை சிநேகமிருப்பதில்லை
நனைய விருப்பப்படுபவனும்
நனைய விருப்பப்டாதவனும்
மழைக்கும் குடைக்குமிடையேயான
சிநேகத்தைப் பற்றி
அதிகம் நினைப்பதில்லை
மழைக்கும் குடைக்குமான சிநேகமென்பது
வண்ணத்துப்பூச்சியின் சிறகுகளுக்கும்
காற்றுக்கும் இடையேயான
சிநேகத்தைப் போல அலாதியானது

அடேயப்பா….