ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 17


அழகியசிங்கர்


அழகியசிங்கர் : வணக்கம்.

ஜெகனும், மோகினியும் : வணக்கம்

அழகியசிங்கர் : போன மாதத்திலிருந்து அமிருதாவும், இந்த மாதத்திலிருந்து உயிர்மையும் அச்சில் வர ஆரம்பித்து விட்டன.

மோகினி :ஆமாம்.  உயிர்மை 200வது இதழ்.

ஜெகன் : கனமான இதழ். 152 பக்கங்கள்.

அழகியசிங்கர் :  உயிர்மை இதழை நிதானமாகப் படிக்க வேண்டும். ‘நாவலாசிரியன் இருத்தலை விசாரணைக்கு உள்ளாக்குபவன்’ என்ற மிலன் குந்தேரா பேட்டி.  ராம் முரளி தமிழாக்கம் செய்திருக்கிறார்.  நிச்சயமாகப் படிக்க வேண்டும்.

மோகினி : நீங்கள் பெரிய விளம்பரம் உள்ள பத்திரிகைகள் பற்றி சொல்லி  இருக்கிறீர்கள்.  மற்ற பத்திரிகைகள் சொல்வதில்லையா?

அழகியசிங்கர் : என் நண்பர் ஆர்க்கே கொண்டு வரும் பூபாளம் பத்திரிகையைப் பற்றியும் சொல்ல வேண்டும்.  அதேபோல் செந்தூரம் ஜெகதீஷ் கொண்டுவரும் செந்தூரம் பத்திரிகையும். பூபாளம் கூட்டு முயற்சி.  செந்தூரம் தனி  மனித முயற்சி.  அந்தப் பத்திரிகைப் பற்றியும் எழுத வேண்டும். சிறகு ரவி தனிப்பட்ட ஒருவராக தன் ரசனைக்கு ஏற்றவாறு சிறகு பத்திரிகையைக் கொண்டு வருகிறார்.  எனக்குப் பிடித்த பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் நான் இரண்டு பத்திரிகைகள் பற்றி எழுதினேன்.  இன்னும் எழுத வேண்டும்.

ஜெகன் : உண்மையைச் சொல்லுங்கள்.  உங்களால் அத்தனைப் பத்திரிகைகளையும் படிக்க முடிகிறதா?

அழகியசிங்கர் : முடியவில்லை.  என்னால் மட்டுமல்ல பலராலும். முனைப்புடன் இதைப் படித்தே தீர வேண்டுமென்று நினைத்தால்தான் படிக்க முடியும்.  ஹரி கிருஷ்ணன் கொண்டு வருகிற மணல் வீடு  தனியாக வாசிக்கும் அனுபவத்தைப் பெற வேண்டும்.

மோஹினி : ஒவ்வொரு பத்திரிகைக்கும் நடத்துவதற்கு எதாவது அர்த்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

அழகியசிங்கர் : ஆமாம்.  குமுதம், ஆனந்தவிகடன் பத்திரிகைகளையும் அலச வேண்டுமென்று நினைப்பேன்.

ஜெகன் :  டெய்லி  எதாவது இட வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.  உங்களால் முடிகிறதா?

அழகியசிங்கர் : முடியும்.  இன்னும் கொஞ்சம் பேர்கள் எழுதினால் பத்திரிகை தன்மை மாறி விடும்.

மோஹினி : இன்னும் இதுமாதிரி படிக்கும் பழக்கமாகவில்லை,  

அழகியசிங்கர் : கொஞ்சம் கொஞ்சமாக வருவார்கள்.  நாம்தான் காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஜெகன் : தொடர்ந்து பேசுவோம்.

அழகியசிங்கர் : பேசுவோம்.

மோஹினி : ஆசிரியர் பக்கத்தை முடித்துவிடலாம.
அழகியசிங்கர் : நன்றி.