புத்தம் சரணம்/ப.மதியழகன்

உள்ளே புத்தர்
உறங்கிக் கொண்டிருக்கிறார்
வெளியே புத்தம்
மகிழ்ச்சி பொங்க சிரிக்கின்றது
ஆசீர்வாதத்தால்
கோப்பை நிரம்பி வழியும்போது
புத்தர் பெருமிதம் கொள்கிறார்
வான்வழியே செல்லும்
அதிர்ஷ்ட தேவதைகள்
புத்தரின் சிரிப்பால்
வசீகரிக்கப்படுகின்றன
சிரிக்கும் புத்தர்
வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்
என்கிறார்
நவீன குபேரரர்கள்
உள்அர்த்தத்தை உணராமல்
காட்சிப் பொருளாகவும்
வாஸ்துவுக்காகவும்
வீட்டில் வாங்கி
வைப்பதோடு சரி!