
கோலமிடாவிட்டால்
பூதம் வரும்
அரசு சுற்றினால்
குழந்தை வரும்
வீட்டை இடித்துக் கட்டினால்
காசு கொட்டும்
போன்ற
நம்மூர் கட்டுக் கதைகளை
‘சும்மாவா சொல்லியிருப்பார்கள்
பெரியவர்கள் ‘
என்று
நம்பும் நாம்
இந்த கோமாளிதான்
புத்தன்
எனும் சீனப் பெரியவர்கள் கதையை நம்பியா
கெட்டுப் போவோம்?
எப்படியோ சிரிக்கக்
கற்றால் சரி
இவரைப் போல
எல்லாவற்றிற்கும்
(சிரிக்கும் புத்தர் படக்கதை)
7/6/2022 காலை 8 மணி

கிண்டலோடு சிரிப்பின் அவசியத்தை அழகாக கூறிவிட்டீர்கள்.