விருமாண்டி படப்பிடிப்பின்போது…அரவிந்த் யுவராஜ்

விருமாண்டி படப்பிடிப்பின்போது அடிக்கடி campacola வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஜெயில் செட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பேன்.

அப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து கமல் இயக்க, அவரின் அண்ணன் திரு.சந்திரஹாசன் தயாரிப்பு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அந்த யூனிட்டில் உள்ள முக்கியமான நபர் ஒரு நடிகரிடம் ,

“இந்த செட் டிசைன் முடிவானதும் ஆர்ட் டைரக்டர் பிரபாகரன் ஒரு பட்ஜெட் கொடுத்தார் . அதைப் பார்த்த சந்திரஹாசன் சார் ” என்னப்பா இவ்ளோ ஜாஸ்தியா கொடுத்திருக்கீங்க , இன்னொரு தடவ கமல்ட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு வாங்க”ன்னு அனுப்பினார். ஆர்ட் டைரக்டரும் கமல்சார்ட்டப் போயி டிஸ்கஸ் பண்ணிருக்கார். கமல்சார் அதில் இன்னும் கரெக்‌ஷன்ஸ் பண்ணிருக்கார். திரும்ப ஒரு பட்ஜெட் போட்டு ஆர்ட் டைரக்டர் சொல்ல , கமல்சார் “அதே பண்ணிடுங்க” ன்னுட்டார் . பட்ஜெட்டைப் பார்த்த சந்திரஹாசன் ஷாக் ஆகிட்டார். முன்ன இருந்த பட்ஜெட்ட விட 20 லட்சம் அதிகமா இருக்கு!!!”….

அந்தப் படத்துக்காகத் தன் வீட்டை வங்கியில் அடமானம் வைத்திருந்தார் கமல்.

இதுதான் ப்ரொட்யூசர் கமல்ஹாசன் …

“விக்ரம் ” படத்தின் ஷூட்டிங் தொடங்கி தியேட்டரில் ரிலீஸ் வரை கமல் என்னும் ப்ரொட்யூஸரை உன்னிப்பாகக் கவனித்து வந்தேன் .

இத்தனை கோடிகள் செலவு செய்த ஒரு தயாரிப்பாளர் படம் முடிந்து , final copy தயாராகி இயக்குனர் அழைத்துக் காட்டும் வரை, தான் நடித்த காட்சிகளைத் தவிர, ஒரு ரஷ் ஷாட் கூடப் பார்க்கவில்லை. என்ன செலவானது , ஏன் செலவு செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை .

படம் முடிந்தபின் ஒரு தயாரிப்பாளராக அவர் செய்த ப்ரமோஷன் வேலைகளை அதற்கு முன் இந்தியாவில் யாரேனும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை .

வடக்கே சோனிடிவியில் kapil sharma show தொடங்கி இங்கே விஜய்டிவி ஜூனியர் சூப்பர் சிங்கர்வரை நாடு முழுக்க டெலிவிஷன் ஷோக்களில் பங்குபெற்று, அதன் பின் பத்திரிகையாளர் சந்திப்புகள் , தனிப் ப்ரொமோஷன் நிகழ்வுகள் என்று இந்த 67 வயதிலும் உலகம் முழுக்க தனி ஒரு மனிதனாகச் சுற்றித் திரிந்து இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்த விதம் …

அந்த ஸ்டமினா … !!!!

Hats Off Producer Kamal sir <3