
வாழ்வின் மகிழ்ச்சிகள் யாவும்…
வண்ணத்துப் பூச்சிகள் போலுமாம் !!!
தொட்டு விடுகையில்…
சட்டெனப் பறப்பதும்…
துரத்தத் துரத்தப்
பறந்து பறந்து…
அழகழகாய்…
அலைக்கழிப்பதுமாய்…
சரி பறக்கட்டும்… என்று
சற்று அமர்ந்தால்…
தானாக வந்து…
நம் தோள் மீது அமரும் !!!
வண்ணத்துப் பூச்சிகள் போலுமாம்…
வாழ்வின் மகிழ்ச்சிகள் யாவும்…
