இனிக்கும் தமிழ் – 132 / டி வி ராதாகிருஷ்ணன்

பெரிய புராணம்

இறைவனை அன்புடன் .பக்தியுடன் வேண்டுபவர்கள் அவனிடம் எந்த கோரிக்கையையும்
வைக்க மாட்டார்கள் என்பதை சொல்கிறது இந்த பெரியபுராண பாடல்.

பாடல்:

கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்
ஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.

பொருள்;

கேடு மாக்கமுங் =  நல்லதும், கெட்டதும்

கெட்ட திருவினார் = இல்லாத சிறந்தவர்கள்.

ஓடுஞ் = வீடும்

செம்பொனும் = செம்மையான பொன்னும் (தங்கம்)

ஒக்கவே நோக்குவார் = ஒன்றாக நினைப்பார்கள்

கூடும் அன்பினில் = மனதில் கூடி வரும் அன்பினால்

கும்பிட லேயன்றி = கும்பிடுவார்களே அன்றி

அவர்கள்

வீடும் = வீடு பேறும் (சொர்கமும்)

வேண்டா = வேண்டாத

விறலின் = வெற்றியில்,

விளங்கினார் = இருந்தார்கள்.