
ஒன்று
என் அப்பாவைப் போல்
இந்தத் தெருவை
நேசித்தவர்கள்
யாரும் இருக்க முடியாது
யாரையும்
அவர் தரக்குறைவாகப்
என்றும் எப்போதும்
பேசியது கிடையாது
மேட் இன் இங்கிலாந்த்
சைக்கிள் மூலம்
அவர் சுற்றாத
இடமில்லை
ஹோமியோபதி
மருந்துகளை
இலவசமாக விநியோகம்
செய்து விடுவார்
எளிமையான உடைகளை
உடுத்துவார்
யாரைப்பற்றியும்
எந்தக் குறையும்
சொல்ல மாட்டார்
என்னைப் பார்க்க வரும்
நண்பர்களுக்கு டீ போட்டுக் கொடுப்பதை
வழக்கமாகக் கொண்டிருப்பவர்
அப்பா…அப்பா.. என் அப்பா..
இரண்டு
அப்பா
கதையில் எழுதி விட்டேன்
கவிதையில் எழுதி விட்டேன்
கட்டுரையில் எழுதி
விட்டேன்
இன்னும் கூட எழுதுவேன்
ஒரு நல்ல மனிதரை
எத்தனை முறை
எழுதிப் பார்த்தால்
என்ன
எத்தனை முறை
எண்ணிப் பார்த்தால் என்ன
என்றும் அப்பா அப்பாதான்

அப்பா அப்பாதான்
நாம எல்லாரும் அப்பா கோண்டுகள் தான். பதிவு அருமை