
எங்கள் தந்தை கவிஞர்.கு.மா.பா.
என்றும் நினைவுகளில்.
அன்றும் இன்றும்…
அன்று அழுத அழுகை
இன்றும் எம் விழிகளில்…
அன்று எழுதிய பாடல்
இன்றும் எம் செவிகளில்…
அன்று வடித்தக் கவிதைக
இன்றும் என் நாவினால்…..
அன்று மூட்டிய உணர்வு
இன்றும் எம் மூச்சினில்…
அன்று பெய்த மழை
இன்றும் எம் மேனியில்…
அன்று காட்டிய அன்பு
இன்றும் எம் இதயத்தில்…
அன்று ஊட்டிய ஞானம்
இன்றும் எம் சிந்தனையில்…
அன்று நுகர்ந்த வாழ்க்கை
இன்றும் எம் மனங்களில்…
அப்பா…
அமுதைப் பொழியும் நிலவு நீ!
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்,
எங்கள் நினைவுகளில்
தினம் ஒரு தீபமாக…
ஒவ்வொரு நாளும்
ஒளி ஏற்றுகிறாய்…
எங்கள் வாழ்வில்..!
