
நாவல்களின் இருண்டகாலத்துக்குப்பி 1940களில் முகிழ்த்த புதுமறுமலர்ச்சியின் முன்னோடி சங்கரராம். அவரைத் தொடர்ந்தே கநாசு, ஆர்.ஷண்முகசுந்தரம் ஆகியோர் நாவல்களை எழுதினார்கள். முதல் வட்டார நாவலாகவும் முதல் கொங்குவட்டார நாவலாசிரியராகவும் 1941ல் மண்ணாசையை எழுதினார் சங்கரராம். அது 136ல் ஆங்கிலத்தில் எழுதியதன் சுதந்திரமான தமிழ்வடிவம். இது கலைமகளில் முதலில் தொடராகவும் வந்தது என்று நினைக்கிறேன். 1942ல் தான் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாள் வந்தது. மண்ணாசையை நான் வெளியிட்டதைத் தொடர்ந்து அவரது அனைத்து நூல்களையும் சேகரித்துவிட்டேன். (இன்னும் இரு நூல்கள் பாக்கி. மூன்று நாட்களுக்கு முன் – முன்பு “பஞ்சத்துக்கு ஆண்டி” சிறுகதைத்தொகுப்பைத் தேடித் தந்த – நண்பர் அரிஅரவேலன் “பரிவு” என்று இதுவரை கேள்விப்படாத ஒரு கதைத்தொகுப்பையும் கண்டுபிடித்துள்ளார்). சங்கரராம் மறைந்த ஆண்டை இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. தினமணி எஸ்.சிவக்குமார் பல நூல்களை பத்திரிகைத் துண்டுகளைத் தேடிப் பிடித்து வழங்கினார். தமிழ்மகன் விடுபட்ட ஒரு அத்தியாயத்தைத் தேடித்தந்துதவினார். சிவக்குமார் தந்ததில் ஒரு சங்கரராம் படம் கிடைத்தது. பிளாக் எடுத்து பதித்தது. புள்ளிகளால் ஆன அந்தப் படத்தையும் சிரம்பாராட்டாமல் வண்ணத்தில் மாற்றித்தந்துவிட்டார் அழியாச்சுடர்கள் நண்பர் Ramprasath Hariharan. போனஸ் ஆக எனது இளவயது படத்தையும் தந்தார்.
அவருக்கு மிகுந்த நன்றி.

நான் வாரப்பத்திரிகையிலிருந்து எடுத்த ஒரு பிளாக் அச்சு உருவப்படத்தைத்தான் தந்தேன். அழியாச்சுடர்கள் நண்பர் கருப்புவெள்ளைப் போட்டோவை வண்ணமயமாக்குவதை விட இது கடினமான வேலை என்று சொல்லிக்கொண்டே அதைக் கூட வண்ணப்படமாக அற்புதமாக மாற்றித்தந்துவிட்டார்.

