வண்ணதாசன் கவிதை

குழந்தையும் மண்ணையும்
குனிந்து பார்க்கையில்
கூடுதல் அழகு
வந்துறும் எனக்கு.
இழந்ததை எல்லாம்
பெறுகிற உணர்வை
இவ்விரு குனிதலும்
தருகிறதெனக்கு.
நிமிர்ந்திருக்கையில்
அடைவதை விடவும்
நேற்று இளம் உயிர்
மடியில் துளிர்த்துக்
கொடி மலராக
அசையும் அதனைக்
குனிந்து பார்க்கையில்
அடைந்த அழகிது.

One Comment on “வண்ணதாசன் கவிதை”

Comments are closed.