புஷ்பால ஜெயக்குமார்
யாரோ ஒருவர்
எழுதிக்கொண்டிருக்கிறார்
அவர் யார் என்று
எனக்குத் தெரியாது
அவர் இதற்கு முன்
எழுதியவராக இருக்கலாம்
இனிமேல்
எழுதப் போகிறவராக
இருக்கலாம்
எதோ ஒன்று
நடந்து கொண்டே இருக்கிறது
என்னால்
தொடமுடியாத தூரத்தில்
என் தலை இருக்கிறது
இருந்தாலும் சொல்லி விடுவேன்
அது யார் என்று
ஒரு எழுத்துருவில்
கிடைத்த பதில் என
நட்சத்திரம் மிளிர்வதைப் போல்
–
