கோவை எழிலன்
இத்தொடரைத் கடவுள் வாழ்த்துடன் தொடங்கலாம் என்றால் சிலர் கடவுள் ஒருவரே என்றும் சிலர் பல கடவுளர் உள்ளனர் என்றும் கூறுகின்றனர். கடவுளரின் தன்மையும் அவர்களிடையே வேறுபடுகின்றது. சிலரோ இத்தன்மை கடவுளுக்கு உண்டு என்கின்றனர்; சிலர் இல்லை என்கின்றனர். சிலரோ கடவுளே இல்லை என்கின்றனர்.
நம்மால் இத்தகைய பன்முகத் தன்மையுடன் இல்லாதவனாகவும் இருக்கின்ற இறைவனின் சிறப்பை அறிய இயலுமா? அவனை சரண் புகுவது ஒன்றே செய்தத்தக்கது.
இப்பொருளைக் கொண்ட கம்பராமாயணப் பாடல் யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தாக .
”ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா”
நம்மாழ்வாரின் “உளன் எனின் உளன் அவன்” என்ற பாசுரம் இப்பாடலின் வித்தாக அமைந்திருக்கலாம்
