என்பா48, 49

அழகியசிங்கர்

என்பா 48

இன்று சரஸ்வதி
பூஜையென்று தெரியும்
விரட்டுகிறாள் மனைவி
சந்தனம் குங்குமம்
எடுத்துக் கொண்டு
கிளம்பினேன். வரிசையாய்
நின்ற வண்டிகள் சிரித்தன

என்பா 49

சிலர் சந்திப்பதாகக்
கூறினார்கள். எப்போது
எந்த இடத்தில் என்று கூறவில்லை
ஏன் சந்திக்க வேண்டும்
என்ற
கேள்வியைக் கேட்கிறேன் இப்போது