
வசீகரமேயில்லாத ஓர் அரசியல் தலைவரைப் பற்றிய நூலை, திரில்லர் நாவலுக்கு இணையான வாசிப்பு சுவாரசியத்துடன் எழுத முடியுமா?
முடியும் என நிருபித்திருக்கிறார் வினய் சீதாபதி. Half – Lion: How P.V Narasimha Rao Transformed India என்கிற தலைப்பில் அவர் எழுதிய ஆங்கில நூல் இது.
கிழக்கு பதிப்பகத்தின் வழியாக தமிழில் வந்திருக்கிறது. நூலின் பாதியில் இருக்கிறேன். முதல் அத்தியாயமே டாப் கியரில்தான் பரபரப்பாக ஆரம்பிக்கிறது.
இந்தியாவின் ஒரு முக்கியமான காலக்கட்டத்தின் வரலாற்றை, அதன் பின்னுள்ள புதிர்களை, வளர்ச்சிகளை மிக நெருக்கமாக காணும் அனுபவத்தைத் தருகிறது.
ஒரு நெருக்கடியான சூழலில் தாராயமயமாக்கலை நோக்கி நகரவேண்டிய முடிவு இந்தியாவிற்கு எத்தனை அவசியமாக இருந்தது என்பதையும் பல சிக்கல்களுக்கிடையில் நரசிம்மராவ் எப்படி அதை சாமர்த்தியமாக அமல்படுத்தினார் என்பதையும் பல நம்பகத்தன்மையான தகவல்களுடன் தரவுகளுடன் விவரிக்கிறது இந்த நூல்.
ஜெ. ராம்கியின் அபாரமான மொழிபெயர்ப்பு வாசிப்பனுபவத்தை இலகுவாக்குகிறது. இத்தனை சுவாரசியமான நூலாக இருக்கும் நான் எதிர்பார்க்கவில்லை.
புன்னகைக்கவே தெரியாத சிடுமூஞ்சி தலைவர் என்று எள்ளி நகையாடப்பட்ட அந்த ஆசாமியால்தான் இந்தியாவில் இன்று பலர் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று கூட இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது தோன்றுகிறது.
