செ.புனிதஜோதி கவிதை

சாளரம் திறந்தேன்
பக்கத்து வீட்டு
சாளரத்தின் கம்பிகளின்
வழியே
எட்டிப்பார்த்த
செந்நிற செம்பருத்தி
காலை வணக்கத்தை
பகிர்ந்தது..

விழி ,மனம்,மூச்சு
செந்நிற
மகரந்தத்தை பூசிவிட்ட

செம்பருத்தியின்
நினைவாய்
களிக்கிறது
இன்றையப்
பொழுது…

தென்றலிடம்
தலையாட்டுவதை போல
நானும் தலையாட்டிக்
கொண்டிருக்கிறேன்..

காத்திருங்கள்
அந்தியைத் தொடும் முன் நானும்
செம்பருத்தியாய்
மாறியிருக்கலாம்.

One Comment on “செ.புனிதஜோதி கவிதை”

  1. அருமை. இயற்கையோடு இயைந்த கவிதை. செம்பருத்தியாய் மாற எண்ணும்.செ.புனிதஜோதிக்கு வாழ்த்துகள்

Comments are closed.