
நினைவுகளாகாத
பொழுதுகள்
வெறும்
போக்குகள்…
போக்கிய
பொழுதுகளில்
தேக்கியவை
எத்தனை?
கடந்த
பொழுதுகளில்
கசப்பானவை
எத்தனை?
இருந்த
பொழுதுகளில்
இனிப்பானவை
எத்தனை?
நல்லவையோ
அல்லவையோ
நினைவுகளான
பொழுதுகளில்…
கசந்தவை
களைந்து…
இனித்தவை
இருத்தினால்…
வாழும்
பொழுதுகள்…
வசந்த
நினைவுகள்…
