
அவள் கவிதை படிக்கிறாள்
ஒரு கவிதையே கவிதை படிக்கிறது
அவள் ஒரு ஓவியத்தைப் பார்க்கிறாள்
ஒரு ஓவியமே ஓவியம் பார்க்கிறது
அவள் பாட்டுப் பாடுகிறாள்
இசையே கீதம் இசைக்கிறது
அவள் தேன் குடிக்கிறாள்
தேனே தேன் குடிக்கிறது
அது அது அதனதன்
வேலையைச் செய்தால்
அதனை மிஞ்சிய கவித்துவம் ஏது?
