
எழுதிக் குவிப்பன் எல்லாம்
எழுத்தாளன் ஆவது இல்லை
எதையோ கிறுக்கி விட்டு
அதையும் கவிதை என்கிறார்
புத்தகம் போட்டவர் எல்லாம்
வித்தகர் ஆவது இல்லை
எண்ணிக்கை அதிகம் நூல்கள்
எண்ணத்தில் நிற்பது எத்தனை?
வள்ளுவன் சொல்லா எதையும்
உள்ளவன் சொல்லப் போவதில்லை
வம்புக்கு எதையோ எழுதி
கம்பன் என்றே சொல்கிறான்
இலக்கியம் படிக்காதவர் எல்லாம்
இலக்கிய வாதி என்கிறார்
திரைப்படப் பாட்டு எழுதினால்
தரையில் உயர்ந்தவர் ஆகிறார்
மரபுக் கவிதை என்று
இரவு முழுக்க எழுதுகிறார்
என்ன சொல்ல வருகிறார்?
என்பதும் புரிவது இல்லை
நிலையா வாழ்க்கை உலகில்
நிலைத்து நிற்பதே எழுத்து
புவியில் கவிதை வாழ்ந்தால்
கவிஞன் அவனே ஆகிறான்
