சின்னஞ்சிறு உலகம்! -/ஆர்க்கே

எப்போதும் அலாதியானது
குழந்தைகள் உலகம்.
ஒரு டெடி பியர்
ஒரு செல்லப் பிராணி
ஒரு உடைந்த கிளிப்
ஒரு பழைய கிண்ணி
சூழலில் சுற்றமும் நட்பும்
வாஞ்சையுடன் பார்க்கும்
பல ஜோடிக்கண்கள்
கவலைகள் ஏதுமற்ற
கள்ளங்கபடில்லா
சிறுபிள்ளை மனம்
இதைக் கொஞ்சி
அதை உடைத்து
அதை கட்டிமுத்தமிட்டு
இதை வீசியெறிந்து என
பூத்துக்
குலுங்குவதாய்த்தான்
குழந்தைகள்
தினங்களின் சரவரிசை.
ஆஹா!
குழந்தைகளின் உலகம்
அலாதியானது.
அதற்குள் நாமும்
இருக்க நேர்வதே
அதிர்ஷ்டமானது!


நன்றி : சொல் புதிது என்ற புலனம்.

One Comment on “சின்னஞ்சிறு உலகம்! -/ஆர்க்கே”

Comments are closed.