பானுமதி.ந
சலசலவெனச் சப்தித்து சலங்கை ஒலியோடு
சாரை போல் நெளிந்தோடி வரும்.
கொஞ்சிக் கொஞ்சி விளையாடியே
கன்னல் தமிழ் மொழி பேசி வரும்.
பல முறை நம்மைத் தழுவிச் சென்று
பண்கள் பலப்பல இசைத்தோடி வரும்
சின்னஞ்சிறு பாலரைப் போல்
சிரித்து நம்மிடம் ஓடி வரும்.
பாவலர் தம் உள்ளத்திலே
பவளக் கொடியாய் வீற்றிருக்கும்
மானிடர் தம் உலகினிலே இதன்
மாண்பு என்னே! என்னே!
