O
தத்துவக் கவிஞர் கிருஷ்ணகிரி
பெருமாள் ராசு அய்யா அவர்களை யோகி ஒரு முறை கரம் பிடித்து, அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றார்.
O
இருவரும் திருக்கோவில் வாசலை அடைந்தபோது, ஒரு அன்பர் ஒரு தம்ளரில் பால் கொண்டு வந்து யோகியை அருந்துமாறு வேண்டிக் கொண்டார். யோகி மறுத்ததோடு அவர்மீது சீற்றம் கொண்டு அப்பால் நகருமாறு கட்டளையிட்டார். அவர் அச்சத்தோடும் துக்கத்தோடும் நகர்ந்த போது , யோகி அந்தப் பாலை அவரையே குடிக்குமாறு கட்டளையிட்டார். அவரும் யோகியின் கட்டளைப்படி பாலைக் குடித்து முடித்தார்.
O
பெருமாள் ராசு அய்யாவுடன் ஆலயத்தின் உள்ளே சிந்தூர வினாயகர் சன்னிதி அருகே கூட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்று யோகி அமர வைத்து அளவளாவினார்.
O
யோகி தாம் பால் கொண்டு வந்த நபரோடு கடினமாக நடந்து கொண்டதாக உணர்கிறீர்களா என்று கேட்டார். பெருமாள் ராசு அய்யாவும் ஆமென்று தலை அசைத்தார். யோகி கூறினார் : ஒரு மருத்துவர் நோயாளி விருப்பத்திற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியாது
O
ஒரு மாதம் உருண்டோடியது… பெருமாள் ராசு அய்யா மீண்டும் யோகியை தரிசிக்க வருகிறார். அருணாசலேஸ்வரர் ஆலயம் அருகே சென்ற போது, அதே அன்பர் இவர் அருகே வருகிறார். யோகி அன்று தாம் கொண்டு வந்த பாலை அருந்தாது சீறியபோது, தாம் மிகவும் வருத்தத்துடன் வீடு திரும்பியதாகவும், தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தற்கொலை நோக்கத்தோடு, இறுதியாக யோகிக்கு பால் வாங்கி கொடுத்துவிட்டுப் போய்விட அன்று வந்ததாகவும்,
வீடு திரும்பிய போது, முன்பு இவரிடம் கடன் வாங்கியவர் பணத்தை திருப்பிக் கொடுக்க, அதைக் கொண்டு தொழிலை மீண்டும் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். சன்னிதித் தெரு இல்லம் வந்து யோகிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
O
யோகி ஒரு முறை குறிப்பிட்டார் ” Even a curse by this beggar is a blessing ( இந்தப் பிச்சைக்காரன் திட்டினாலும், அது ஒரு ஆசிர்வாதமே )
O
ஞானிகளின் சீற்றமும் பெரும் ஆசியே என்பதை யோகி பலருக்கும் உணர்த்தியுள்ளார்
O
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜயகுரு ராயா

Share
