காஃபியக் காதல்/ஆர்க்கே

டவரா டம்ளரோ

ஜாணுயர லோட்டாவோ

கண்ணாடி கிளாஸோ

பீங்கான் குவளையோ

காகிதக்குவளையோ

நெகிழிச்சிறு கப்போ

தேக்கக்கலன் எதுவாயினும்

அத்தனையிலும்

ப்ரியமாய் எழுந்தருளி

ருசி அவதார தரிசனம் தரும்

திரவ தேவதை

இந்த —

காஃபி மஹாராணி..!

முக்கால் சர்க்கரை

முன் தலைமேல்

சிறு நீராவி நடனம்

நுரைத்திடு மேக மேலடுக்கு

கடத்திடும் ருசியின் கிறக்கம்–

சிறந்ததொரு கவிதையும் தருவதில்லை.

கை பொறுக்காச் சூடதனை

எளிதில் ப்ரியமாய்

வாய் சுவைக்கும்

அதிசயத்தை

காஃபியெனும்

பேரமுதம் மட்டுமே

நிகழ்த்திக் காட்டும்.

கண்கள், கரங்கள்,

இதழ்கள், வாய், நாக்கு,

தொண்டை ரத வீதிகளில்

தினந்தினம்

உலா வரும்

திரவத் திருவிழா..!

நல்ல நாளென்பதன்

மங்கலத் துவக்க பிள்ளையார் சுழி

ஒரு ஃபில்டர் காஃபியெனும் பெயரில்

சிறு டம்ளர்

அகத்தியர் கமண்டலத்துள்

சுடு காவிரியாய்

உற்சாகபிரவாகம் ஒடுக்கி வைத்திருக்கிறது-

ஒவ்வொரு

புலர்காலைப் பொழுதினிலும்..!

இணுக்கப்பட்ட

காப்பிக் கொட்டையின்

தயார்நிலை துகள்தூள்கள்

ஃபில்டர் காபியின்

குணநிழலை விரித்தாலும்

ஃபில்டர் காஃபியின்

பிரேமப்பேரன்பின்

சிறுகதிர்வீச்சே..

உடனடி தயார்நிலை

இன்ஸ்டண்ட்கள்.

ஆனாலும்–

அவசரக் காஃபியின்

வாத்ஸல்ய சுகந்தமதை

அதுவும்தான் பரப்பி வைக்கும்

பரபரப்பு காலைகளில்..!

நல்ல படைப்பிற்கு

நாடெழுதித்தந்த

மன்னர் பரம்பரை

இல்லாதிருக்கலாம்.

ஆனால்–

நல்ல ஃபில்டர் காஃபிக்கு

நாளெழுதித் தாராத

ருசிமானுடப் பிறவிக்குருடர்

யாரேனுமிருக்கிறார்களா என்ன..!?

பல்துலக்கம்

ஓய்வறை ஒதுக்கம்

செய்திதாள் படிப்பு

சிற்றுணவுக் கொறிப்பு

இன்னபிற

அதிகாலை கெடுபிடித் தவங்கள்

யாவினையும்

பின்னுக்குத் தள்ளி வைக்கும்

திரவத்தோற்ற மேனகை

ஃபில்டர் காஃபிக்குள்

அலை புரள்வதை

கண்டவர் உன்னதர்..!

பசுவா, எருதா,

ஆடா என

பால்பேதம் பார்க்கா

டிகாக்ஷன் ராட்சசன்

அரிதாய் சிலசமயம்

கடுங்காப்பி அரிதாரம்

பூசினாலும்

எல்லோரின்

திருவுளச்சீட்டிலும்

வேண்டுதல்வகைப் பிரிவில்தானே

“பாலு”ணர்வுக் காஃபியது

ஏடெடுத்து ஓடிவரும்..!?

அன்னையர் தினம்

காதலர் தினம்

நண்பர்கள் தினம்

காதலர் தினம்

என

வருடக்குறிப்புகளில்

ஏதேனும் ஒரு நாள்

தினச்சிறப்பு கிரீடமணிந்தாலும்

அவையாவும்

எப்போதும் இருப்பதுதான்!

அந்த நாளதனில் மட்டுமே

சிறப்பதுதான்..!

ஆனாலும்–

நல்லகாஃபி தேடிச் செல்லும்

நாக்கு ருசி கலைஞனுக்கு

அனுதினமும் அலுக்காமல்

உதித்து உயிர்துலக்குகிற

சூரியன்போல–

தினம்தினமும்

கோப்பைக்குள்

அவரவர்க்காய் விடிவதாய்த்தான்

நுரைத்துத் ததும்புகின்றன

இந்த

அசல் ஃபில்டர்–

காஃபி தினம்..!

May be an image of coffee cup and text that says 'Shhhhhhh...... My coffee and I are having a moment. will deal with you later.'

25Bhaskaran Jayaraman, Kandasamy R and 23 others

25 Comments

Like

Comment

Share