சிறகா
உதயத்தில் ஒளிரும் நீல வானம்..
நிறம் மாறாமல் பிரதிபலிக்கும் கடல்….
உதயத்தில் ஒளிரும் நீல வானம்..
நிறம் மாறாமல் பிரதிபலிக்கும் கடல்….
பிரபஞ்ச அன்னையின்
கையில் ஒளித்துகள்கள்
மிளிரும் அட்சய குவளை…
நிறைவுடன் இலேசாக
காற்றில் மிதக்கும் நறுமணம்
கமழும் ஆன்மா… மண்
தொட்டு பிறந்து விண் நோக்கி
விடுதலையில் …
சந்தோஷ அலைகளின்
ஒளிக் கீற்றாய்….
இயற்கையின் இதமான தழுவலில் ….
புதிய பயணம்….
படைப்பின் இரகசியம்
அறிந்தவர் யார்…. ஒளியுட ன்
கலக்கும் மகிமையை உணர்ந்தவர்…….
